/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதையில் கார் ஓட்டி சென்றவர்களை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்
/
போதையில் கார் ஓட்டி சென்றவர்களை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்
போதையில் கார் ஓட்டி சென்றவர்களை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்
போதையில் கார் ஓட்டி சென்றவர்களை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்
ADDED : ஜூலை 10, 2025 10:36 PM

கோவை; கோவை, உக்கடம், வின்சென்ட் சாலையில் கடந்த 25ம் தேதி இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, காருக்குள் இருந்த நபர் வெளியே வராமல் உள்ளே இருந்தபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மது போதையில் உள்ளனரா என்பதை சோதனை செய்ய போலீஸ்காரர் ஒருவர் காருக்குள் சென்று பார்த்த போது, காரை வேகமாக எடுத்து சென்றுள்ளார்.
இதயைடுத்து, சக போலீசார் காரை துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர். அப்போதும், கீழே இறங்க மறுத்த இளைஞர்களை போலீசார் வெளியில் வரவழைத்தனர். அப்போது, அவர்கள் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.
மதுபோதையில் காரை ஓட்டி சென்றதால் போலீசார் வாலிபர்களை நடுரோட்டில் வெளுத்து வாங்கினர். பின்னர், மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினர். இதை அப்பகுதயில் வசிக்கும் நபர் ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.