/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வித்ய விகாசினி பள்ளி நிறுவனர் நாள் விழா
/
வித்ய விகாசினி பள்ளி நிறுவனர் நாள் விழா
ADDED : ஜன 28, 2025 07:24 AM

பெ.நா.பாளையம் :   துடியலூரில் உள்ள வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நிறுவனர் நாள் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளியின் செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார்.
பள்ளியின் நிறுவனர் ஜெயலட்சுமி நினைவு சொற்பொழிவாற்றிய, கல்வியாளர் கிருஷ்ணராஜ் வாணவராயர்,  ''கலை, பண்பாடு, கலாசாரத்தில் உலகில் உள்ள மற்ற அனைத்து நாடுகளை விட, நம் நாடு உயர்ந்து நிற்கிறது. சுவாமி விவேகானந்தர் கூறியது போல, 'மனிதா நீ மகத்தானவன்' என்பதை மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் முன்னேற, தமிழைப் போலவே ஆங்கிலத்தையும், நீங்கள் நன்கு கற்றுக்கொள்ள வேண்டும், என்றார்.
நிகழ்ச்சியில், ஆடிட்டர் பாரத் ஷா, முதல்வர் மணிமாறன் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில், பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

