ADDED : அக் 20, 2026 07:56 PM

அ நிறம் | அளவு
சூலூர்:
விஜய தசமியை ஒட்டி, சூலுர் வட்டார கோவில்களில், குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கப்பட்டது.
நவராத்திரியின் பத்தாவது நாளான நேற்று விஜய தசமி விழா கொண்டாடப் பட்டது. விசைத்தறி கூடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மறு பூஜை செய்து பணிகள் துவங்கின. விஜய தசமியை ஒட்டி, சூலூர் வட்டாரத்தில் உள்ள கோவில்களில் வித்யாரம்பம் எனும் குழுந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்வு நேற்று நடந்தது.
சூலூர் சிவன் கோவில் மற்றும் சுற்றுவட்டார கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, குழந்தைகளுக்கு அரிசியில் 'அ' உள்ளிட்ட எழுத்துக்களை எழுத பெற்றோர் கற்று கொடுத்தனர். குழந்தைகளுக்கு, பென்சில், சிலேட், நோட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
சின்னக் குயிலி ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த வித்யாரம்ப நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்.
