/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வித்யாஷ்ரம் பள்ளி கிரிக்கெட் போட்டி
/
வித்யாஷ்ரம் பள்ளி கிரிக்கெட் போட்டி
ADDED : பிப் 16, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை வித்யாஷ்ரம் பள்ளி கிரிக்கெட் போட்டி, பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து, பத்து அணிகள் போட்டியிட்டன.
இறுதிப் போட்டியில், வித்யாஷ்ரம் பள்ளியை கே.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிர்கொண்டது. இதில், கோவை வித்யாஷ்ரம் அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை, வித்யாஷ்ரம் அணியை சேர்ந்த கிருத்திக் மற்றும் தொடர் நாயகன் விருதை கே.வி.பள்ளி வீரர் தீபன், சிறந்த பந்து வீச்சாளர் விருதை கே.வி.வீரர் சரண், பேட்ஸ்மேன் விருதை பிரனேஷ் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் பரிசுகள், கோப்பைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

