ADDED : ஏப் 15, 2026 05:50 AM

அ நிறம் | அளவு
கோவை: அ.தி.மு.க., விற்கு ஆதரவு தெரிவித்துள்ள, தமிழக தன்னுரிமை கழக கட்சி தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான பழ.கருப்பையா, கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் மக்கள் ஒரு மாறுதலை எதிர்நோக்கி நிற்கின்றனர். நீதி கட்சியோடு துவங்கிய திராவிட இயக்கம், ஸ்டாலினோடு முடிவடையும். த.வெ.க., கட்சியின் வருகையால், அ.தி.மு.க., விற்கு எந்த பாதிப்பும் இல்லை. அக்கட்சிக்கு பிரத்யேக அரசியல் கொள்கை இல்லை. அதன் தலைவர் விஜய்க்கு அரசியல் அறிவு கிடையாது. சர்க்கார் படமும், நிஜ அரசியலும் ஒன்றல்ல என்பதை விரைவில் அவர் உணருவார்.
பிரதமர் மோடியின் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாகவே இருக்கிறது. ஈரான் போர் விவகாரத்தில் கூட, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல், சிறப்பாக நிர்வாகம் செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
