/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி 'கில்லி' ஆக விளையாடிய விஜய் அணி
/
இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி 'கில்லி' ஆக விளையாடிய விஜய் அணி
இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி 'கில்லி' ஆக விளையாடிய விஜய் அணி
இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி 'கில்லி' ஆக விளையாடிய விஜய் அணி
ADDED : மே 05, 2025 11:20 PM

கோவை, ; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இரண்டாவது டிவிஷன் போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடந்து வருகிறது. விஜய் கிரிக்கெட் கிளப் அணியும், திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
பேட்டிங் செய்த விஜய் கிரிக்கெட் கிளப் அணி, 50 ஓவரில், 220 ரன்கள் எடுத்தது. வீரர் கண்ணன், 47 ரன்கள், அருண், 36 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தனர். அடுத்து விளையாடிய திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணி, 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 196 ரன்கள் எடுத்தது.
வீரர்கள் ராஜாராம், 69 ரன்கள், அரவிந்த், 33 ரன்கள் எடுத்தனர். எதிரணி வீரர் டைசன் ஜோசப், லோகேஷ்வரன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.
அதேபோல், ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், ஆதித்யா கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
பேட்டிங் செய்த ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் அணியினர், 33 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 145 ரன்கள் எடுத்தனர். வீரர் கவுதம், 68 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் ராஜசேகர், சந்தோஷ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய ஆதித்யா அணியினர், 28.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 76 ரன்கள் எடுத்தனர். வீரர் ஆதித்யா, 30 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் ராஜேஷ் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தினார். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.