/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஜய் பிறந்த நாள் விமரிசையாக கொண்டாட முடிவு
/
விஜய் பிறந்த நாள் விமரிசையாக கொண்டாட முடிவு
ADDED : ஜூன் 21, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய்யின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட, கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
வரும் சட்டசபை தேர்தலில், முதல் முறையாக களமிறங்க உள்ளது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். முழு நேர அரசியல்வாதியாக மாற உள்ள நிலையில், அவரின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' மீது, மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாளை, நடிகர் விஜய்யின் பிறந்தநாளை, விமரிசையாக கொண்டாட கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கோவை வடக்கு, தெற்கு, கவுண்டம்பாளையம் தொகுதிகளில், பல இடங்களில் உள்ள கோவில்களில், சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.