ADDED : ஜூன் 23, 2025 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; வால்பாறை நகர த.வெ.க., சார்பில், கட்சி தலைவர் விஜய் பிறந்தநாள் விழாவுக்கு, நகர செயலாளர் ஆண்ட்ரூஸ் தலைமை வகித்தார். செயலாளர் செய்யதுஅலி, பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி தலைவி ஏஞ்சல் வரவேற்றார்.
விழாவில், விஜய் பெயரில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கட்சிக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. எஸ்டேட் பெண் தொழிலாளர்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கபட்டது. மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.