நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்,; அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், 25ம் ஆண்டு தேர்த் திருவிழா நேற்று துவங்கியது.
காலை 10:00 மணிக்கு அன்னுார், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சின்னம்மனுக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது.
இதையடுத்து ஓதிமலை சாலையில் உள்ள பெரிய அம்மன் கோவிலில், பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கிராம சாந்தி பூஜை நடந்தது.
இன்று காலை 8:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு சுவாமி கயிலை வாத்தியத்துடன் தேர்வீதி வழியாக உலா வந்து அருள் பாலிக்கிறார். மாலையில் யாகசாலை பூஜை நடக்கிறது.
வரும் 10ம் தேதி காலை 11:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.