/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேகத்தடைகள் அகற்றியதால் விபத்து: கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

ADDED : நவ 24, 2025 06:11 AM
அன்னுார்: கோவில்பாளையத்திலிருந்து, குப்பேபாளையம், செங்காளிபாளையம் வழியாக காரமடை செல்லும் பாதையில் இரு வாரங்களுக்கு முன்பு வி.ஐ.பி., வருகைக்காக வேகத்தடைகள் அகற்றப்பட்டன. மீண்டும் அமைக்கப்படவில்லை.
இந்த பாதையில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று விபத்துகள் ஏற்பட்டுவிட்டன. நேற்றுமுன்தினம் இரவு வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் 50 வயது பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இதில் அந்தப் பெண் படுகாயம் அடைந்தார்.
இதனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள், முன்னாள் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி தலைமையில் விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தை பிடித்து வைத்துக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அன்னுார் எஸ்.ஐ., முத்தலீப் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். 'விரைவில் வேகத்தடை அமைக்கப்படும்,' என உறுதி அளித்தனர். இதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியலால் 45 நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இது குறித்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார் கூற உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.