/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ்நாடு விளையாட்டு அணிகளில் காரமடை மாணவர்கள் தேர்வு
/
தமிழ்நாடு விளையாட்டு அணிகளில் காரமடை மாணவர்கள் தேர்வு
தமிழ்நாடு விளையாட்டு அணிகளில் காரமடை மாணவர்கள் தேர்வு
தமிழ்நாடு விளையாட்டு அணிகளில் காரமடை மாணவர்கள் தேர்வு
ADDED : நவ 24, 2025 06:11 AM
மேட்டுப்பாளையம்: இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் 69வது தேசிய அளவிலான போட்டிகள் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றது.
இதில் காரமடை எஸ்.வி.ஜி.வி., பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கூடைப்பந்து, வாலிபால், சதுரங்கம், ஈட்டி எரிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், 14, 17, 19 உள்ளிட்ட பிரிவுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். மேலும், இவர்களில் மாணவி தக்ஸதா, அக்ஸிதா, ஸ்மிதா, மாணவர் அகில் உள்ளிட்டோர் தமிழ்நாடு கூடைப்பந்து அணியில் விளையாட தேர்வாகி உள்ளனர்.
அதே போல் தமிழ்நாடு வாலிபால் அணியில், மாணவர் விஜேஷ் குமார் மாணவி, ஜனவர்ஷினி தேர்வாகியுள்ளனர். தமிழ்நாடு சதுரங்க அணியில், மாணவி பிரகன்யா தேர்வாகியுள்ளார். தடகள அணியில் மாணவன் சுதிக்சன் தேர்வாகியுள்ளார். இவர்களை பள்ளி தாளாளர் பழனிச்சாமி, நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், முதல்வர் சசிகலா, செயலாளர் ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் பாராட்டினர்.--

