/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நத்தம் பதிவேடு இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்
/
நத்தம் பதிவேடு இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்
ADDED : அக் 16, 2025 09:01 PM
அன்னுார்: நத்தம் பதிவேடு இல்லாததால் கஞ்சப்பள்ளி மக்கள் தவிக்கின்றனர்.
அன்னுார் தாலுகாவில் உள்ள 30 வருவாய் கிராமங்களிலும் கிராம நத்தம் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆன்லைன் பதிவேற்றத்திற்காக சில மாதங்களுக்கு முன்பு கிராம நத்தம் பதிவேடுகள் கோவையில் உள்ள நில அளவை துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பணி முடித்து மீண்டும் பதிவேடுகள் இங்கு கொண்டு வரப்படவில்லை.
இது குறித்து கஞ்சப்பள்ளி மக்கள் கூறுகையில், 'நத்தம் பதிவேடு இல்லாததால் நகல் பட்டா பெற முடிவதில்லை. நத்தம் பட்டா மாறுதல் செய்ய முடிவதில்லை நில அளவைக்கு பணம் செலுத்த முடிவதில்லை.
இந்த சேவைகள் பெற முடியாததால் வங்கி கடன் பெறுதல், அடமானம் செய்தல், நத்தத்தில் வீடு கட்டுதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுகின்றன.
இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. விரைவில் மீண்டும் அனைத்து கிராமங்களுக்கும் கிராம நத்தம் பதிவேடுகளை கொண்டு வரச் செய்து, நத்தம் பட்டா மாறுதல், நகல் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.