/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரவில் மது விற்பனை கிராம மக்கள் அதிருப்தி
/
இரவில் மது விற்பனை கிராம மக்கள் அதிருப்தி
ADDED : ஜன 02, 2025 12:17 AM
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, வடபுதூர் ரோட்டில் உள்ள அரசு மதுபான டாஸ்மாக் கடையில், சில்லிங் விற்பனை நடப்பதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, வடபுதூர் செல்லும் வழியில் அரசு மதுபான டாஸ்மாக் கடையுடன், பார் உள்ளது. இப்பகுதியில், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் சில்லிங் விற்பனை நடக்கிறது. இரவு, 10:00 மணிக்கு மேல் மது விற்பனை அமோகமாக நடக்கிறது. இதனால், இப்பகுதி மக்கள் வேலைக்கு சென்று வீடு திரும்பும் போது அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் பைக்கில் செல்லும் போது, சிலர் மது குடித்து விட்டு போதையில் தள்ளாடிய படி செல்வதால், பைக் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர். மாலை நேரத்தில் வேலை முடித்து செல்லும் பெண்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே, இங்கு  உள்ள டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யவோ அல்லது நிரந்தரமாக மூடவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என, பொதுமக்கள் தெரிவித்தனர்.

