/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்கள்; துாய்மையை பாதுகாத்து நிரூபிக்க ஒரு வாய்ப்பு

ADDED : ஆக 14, 2025 09:07 PM

கோவை: விநாயகர் சதுர்த்தி விழா, தெய்வீக கொண்டாட்டம், ஆனால் நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாத்து நம் உறுதியை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கோவை கலெக்டர் கூறியுள்ளார்.
இது குறித்து கலெக்டரின் அறிக்கை:சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்துங்கள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளைப் பயன்படுத்த கூடாது. சிலைகளை அலங்கரிக்க, சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மாகோல் உள்ளிட்ட ரசாயனங்களையோ அது சார்ந்த சாயங்களையோ பயன்படுத்தாதீர்கள்.விநாயகர் சிலைகளுக்கு சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள்.
சுற்றுசூழலிற்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தவும்.
பிரசாதம் வழங்க மக்கும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுக்கள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தவும். ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் தட்டு, கோப்பை, கரண்டி மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்துங்கள். குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கலந்து கொட்ட வேண்டாம். அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.
அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது.இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.