/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
நாளை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : டிச 03, 2024 09:08 PM
சூலுார்; பொன்னாண்டாம்பாளையம் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
கணியூர் ஊராட்சி பொன்னாண்டாம் பாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் தீட்டும் திருப்பணிகள் முடிந்தன. நேற்று மாலை, சென்னி யாண்டவர் கோவிலில் இருந்து முளைப்பாலிகை, தீர்த்தக் குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இன்று காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. மாலை விநாயகர் வழிபாடு, காப்பு கட்டுதல், முதல் கால ஹோமமும், இரவு அஷ்ட பந்தன் மருந்து சாத்துதலும் நடக்கிறது.
நாளை காலை, 7:30 மணிக்கு, 108 வகை மூலிகை திரவியங்களால் ஹோமம், பூர்ணாகுதி நடக்கிறது. 8:30 மணிக்கு, விமானம் மற்றும் மூலவர் விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.