/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 18, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: கெம்பநாயக்கன்பாளையத்தில், பழமை வாய்ந்த உள்ளூர் விநாயகர் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழா வருகிற 21ம் தேதி மாலை புனித நீர் வழிபாடுடன் துவங்குகிறது. இரவு 7:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து குடங்கள் மற்றும் முளைப்பாலிகை செல்வ விநாயகர் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. வரும் 22ம் தேதி காலை விநாயகர் வேள்வியும், இரவு விமான கலசங்கள் நிறுவுதலும், எண் வகை மருந்து சாத்துதலும் நடக்கிறது. வரும் 23ம் தேதி காலை 9:00 மணிக்கு உள்ளூர் விநாயகர் கோபுரம் மற்றும் விநாயகருக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

