/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதிமீறல்: 151 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத் துறை வழக்கு
/
விதிமீறல்: 151 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத் துறை வழக்கு
விதிமீறல்: 151 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத் துறை வழக்கு
விதிமீறல்: 151 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத் துறை வழக்கு
ADDED : டிச 07, 2024 06:19 AM
கோவை; கோவை, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காயத்திரி வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை, கூடுதல் தொழிலாளர் கமிஷனர் சாந்தி அறிவுறுத்தலின்படி, கடந்த நவம்பரில், தொழிலாளர் நலச் சட்டங்கள், எடையளவு சட்டங்களின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், எடையளவு முரண்பாடுகள், கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், விலைப்பட்டியல் என, பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, 151 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடைகள் மற்றும் நிறுவனங்களில், குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 2 நிறுவனங்களின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர் குறித்த விவரங்களை labour.tn.gov.in/ism என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக தலா ரூ.20, நிறுவனத்தின் பங்காக ரூ. 40 சேர்த்து, டிச., ஊதியத்தில் பிடித்தம் செய்து, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு ரூ. 60 வீதம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.