/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் இன்று விஷ்ணுபதி பூஜை
/
கோவில்களில் இன்று விஷ்ணுபதி பூஜை
ADDED : பிப் 12, 2024 11:39 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், விஷ்ணுபதி பூஜை இன்று நடக்கிறது.
விஷ்ணுபதி புண்யாகாலம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை தமிழ்மாத பிறப்பையொட்டி வருகிறது. விஷ்ணுபதி பூஜையை முன்னிட்டு, கோவிலில் பெருமாளை வழிபாடு செய்து வலம் வருவது சிறப்பாகும் என கூறப்படுகிறது.
இதையொட்டி, பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், விஷ்ணுபதி பூஜை இன்று நடக்கிறது. விழாவையொட்டி கோவிலில் இன்று காலை, 5:00 மணிக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகளும், தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.
பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜப்பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.காலை, 6:00 மணியில் இருந்து மதியம், 12:00 மணி வரையும், மாலை, 5:00 மணியில் இருந்து, இரவு, 7:00 மணி வரையிலும், 27 மலர்கள் கொண்டு, 27 முறை கோவில் பிரகாரத்தை வலம் வந்தால் பலன் கிடைக்கும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.