ADDED : ஆக 12, 2025 07:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், விஷ்ணுபதி புண்யா கால பூஜை வரும், 17ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, அதிகாலை, 3:00 மணிக்கு மூலவருக்கு அபிேஷகம், 5:00 மணிக்கு சிறப்பு யாகம் நடக்கிறது.
விஷ்ணுபதி புண்யா காலத்தில், பெருமாள் கோவிலுக்கு சென்று கொடிமர நமஸ்காரம் செய்து, 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு, 27 முறை பிரகார வலம் வந்து ஒவ்வொரு சுற்றுக்கும், ஒரு பூவை கொடி மரத்துக்கு முன் வைத்து வழிபட வேண்டும்.
பூமிக்கு அதிபதியான பூதேவி தாயாரை அந்த நாளில் நடக்கும் மகா பூஜையில் பங்கேற்று வழிபட்டால், நிலம், வீடு வாங்க தயாரின் அருள் பெற முடியும், என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.