/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஸ்வ ஹிந்து பரிஷத் கந்த சஷ்டி வேல் பூஜை
/
விஸ்வ ஹிந்து பரிஷத் கந்த சஷ்டி வேல் பூஜை
ADDED : அக் 29, 2025 12:29 AM

சூலுார்: விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கந்த சஷ்டி வேல் பூஜை நடந்தது.
சூலுார் ஒன்றிய விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், முதலாமாண்டு மகா கந்த சஷ்டி வேல் பூஜை, குமரன் கோட்டம் சுவாமிநாத சுவாமி கோவிலில் நடந்தது. கோ பூஜை மற்றும் வேல் பூஜையை, காமாட்சி புரி ஆதீனம் ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமி நடத்தி வைத்து அருளாசி வழங்கினார். தொடர்ந்து, நிர்வாகிகள், பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.
மாநில செயலாளர் லட்சுமண நாராயணன், மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், இணை செயலாளர் தியாகராஜன், தர்ம பிரசார் அமைப்பின் நிர்வாகி சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பூஜையில் பங்கேற்ற எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேசுகையில், ''கோவில்கள், ஆறுகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பது நமது கடமை. இறைவனிடத்தில் துாய்மையான பக்தியை செலுத்தினால், அனைத்து பிரச்னைகளும் அகலும். கூட்டு பிரார்த்தனை நல்ல பலனை தரும்.
கோவில் சொத்துக்கள் மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்பட வேண்டும். இறைவனுக்கு படைப்பது அனைத்தும் மக்களுக்காகவே ஆகும். பக்திதான் நம்மை உயர்த்தும்,'' என்றார்.

