/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'
/
விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'
விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'
விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'
ADDED : மே 19, 2025 11:17 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டி விஸ்வதீப்தி பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாணவர் தருண் மற்றும் தேஜஸ் ஆகியோர், 494 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றனர். மாணவி பிரியதர்ஷினி, 491 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும்; சுஷ்மிதா, 489 மதிப்பெண்ணுடன் மூன்றாமிடமும் பெற்றனர். மாணவி பூர்ணா விஜயா ஸ்ரீ ஆங்கிலத்திலும், நந்திதா சமூக அறிவியலிலும் 100 மதிப்பெண்கள் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜாய் கரிப்பாய், தாளாளர் அருட்தந்தை ஆண்டனி கலியத், பிரெசித்தா மாகாணத்தின் தலைவர் அருட்தந்தை சாஜூ சக்காலக்கல், இந்தியன் இம்மியூனாலஜிக்கல் லிமிடெட் இயக்குனர் ஆனந்தகுமார், முன்னாள் முதல்வர் அருட்தந்தை பிரான்ஸில் தைவலப்பில், பொருளாளர் அருட்தந்தை நிமிஷ் சுண்டன்குழியில் ஆகியோர் பாராட்டினர்.