/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஸ்வகர்மா கூட்டமைப்பு மத்திய அமைச்சரிடம் மனு
/
விஸ்வகர்மா கூட்டமைப்பு மத்திய அமைச்சரிடம் மனு
ADDED : ஜூலை 19, 2025 12:24 AM
போத்தனுார்: தமிழ்நாடு - புதுச்சேரி விஸ்வகர்மா சமூகம் மக்கள் கூட்டமைப்பு சார்பில், தங்க நகை தொழில் குறித்த டிப்ளமோ படிப்புகள் ஏற்படுத்த, மத்திய கல்வி துறை அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டது.
மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நேற்று கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரை தமிழ்நாடு - புதுச்சேரி விஸ்வகர்மா சமூகம் மக்கள் கூட்டமைப்பின், மாநில துணை தலைவர் கமலஹாசன் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.
அப்போது அவரிடம் கொடுத்த மனுவில், தங்க நகை தொழிலில் வடிவமைப்பு தொடர்பாக, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ படிப்புகள் ஏற்படுத்த வேண்டும்.
விஸ்வகர்மா சமூக மக்கள் ஐந்து தொழில் துறைகளில் முன்னேற, ஐந்தொழில், தொழில் பூங்கா மத்திய அரசால் அமைக்கப்பட்டு, தற்போது நவீனமயமாக்கப்படும் இயந்திரங்களில், பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மாநில ஊடக பிரிவு துணை தலைவர் சபரிகிரிஷ் உடனிருந்தனர்.