/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஸ்வகர்மா யோஜனா திட்டம் பதிவு முகாம்
/
விஸ்வகர்மா யோஜனா திட்டம் பதிவு முகாம்
ADDED : பிப் 18, 2024 10:47 PM
மேட்டுப்பாளையம்:காரமடை அருகே புஜங்கனூர் பிரிவில் பா.ஜ., சார்பில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் பதிவு முகாம் நடந்தது.
பாரம்பரிய கைவினைஞர்களுக்கு, பல்வேறு வகையில் நிதியுதவி, கடனுதவி அளிப்பதற்காக மத்திய அரசின் சார்பில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.
இத்திட்டத்தின் கீழ் தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பி, கல் தச்சர், காலணி செய்பவர், கொத்தனார், கயிறு செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவை தொழிலாளர், தையல் கலைஞர் உட்பட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பயன்பெறலாம்.
காரமடை மேற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் புஜங்கனூர் பிரிவில் பா.ஜ.,அலுவலகத்தில் இத்திட்டத்திற்கான பதிவு முகாம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பா.ஜ., காரமடை மேற்கு ஒன்றிய தலைவர் யோகானந்தம் தலைமைவகித்தார்.
தோலம்பாளையம், வெள்ளியங்காடு, புஜங்கனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு இத்திட்டத்தில் தங்களை பதிவு செய்தனர்.
இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட துணை தலைவர் விக்னேஷ், மாவட்ட அமைப்பு சாரா தலைவர் சரவணன் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.----

