sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

டிரினிட்டி கண் மருத்துவமனையில் பார்வை பரிசோதனை முகாம்

/

டிரினிட்டி கண் மருத்துவமனையில் பார்வை பரிசோதனை முகாம்

டிரினிட்டி கண் மருத்துவமனையில் பார்வை பரிசோதனை முகாம்

டிரினிட்டி கண் மருத்துவமனையில் பார்வை பரிசோதனை முகாம்


ADDED : நவ 14, 2024 04:09 AM

Google News

ADDED : நவ 14, 2024 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் உள்ள டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையில் சர்வதேச சர்க்கரை நோய் தினம் முன்னிட்டு, பார்வை பரிசோதனை முகாம் இலவசமாக நடக்கிறது.

மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:

நீரிழிவு என்பது ஒரு நீண்ட கால பாதிப்பாகும். இது உலகெங்கிலும் மில்லியன் கணக்கான நபர்களை பாதிக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவை மட்டுமல்ல, கண்கள் மற்றும் உடலின் பிற உறுப்புகளையும் பாதிக்கிறது.

விழித்திரை என்பது கண்களின் பின்புறத்தில் உள்ள ஒரு மெல்லிய அடுக்கு. இது ஒளிக்கு உணர்திறன் கொண்டது. சர்க்கரையால் வரும் பார்வைப் பிரச்னை தீவிரமானதாக உள்ளது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

டிரினிட்டி கண் மருத்துவமனையில், பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் உள்ளன.

மருத்துவமனையில் சர்வதேச சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, பார்வை பரிசோதனை முகாம் இலவசமாக நடத்தப்படுகிறது. இன்று (நவ.,14) துவங்கும் முகாம், வரும் 30 தேதி வரை நடக்கிறது. தினமும், காலை, 9:30 முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கும் முகாமில், ரூ.1,500 மதிப்புள்ள ரத்த சர்க்கரை பரிசோதனை, பார்வை பரிசோதனை, பண்டஸ் போட்டோ மற்றும் டிலேட்டட் பண்டஸ் உள்ளடக்கிய பேக்கேஜ் இலவசமாக வழங்கப்படுகிறது; மருத்துவர் ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

முதலில் பதிவு செய்யும், 500 பேருக்கு இப்பரிசோதனை தொகுப்பில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.

முகாமில் பங்கேற்போரில் தேர்ந்தெடுக்கப்படும், 100 நபர்களுக்கு ஆறு மாதங்களுக்கு, 'தினமலர்' நாளிதழ் இலவசமாக வழங்கப்படும்.

பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 77369 05222, 87143 20111 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us