/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.என்.எஸ்., அக்ரானிக்கு துணை அட்மிரல் வருகை
/
ஐ.என்.எஸ்., அக்ரானிக்கு துணை அட்மிரல் வருகை
ADDED : அக் 30, 2024 09:24 PM

கோவை ;கோவை ஐ.என்.எஸ்., அக்ரானியில், கடற்படை பிரிவுகளை பார்வையிட்ட துணை அட்மிரல் ஸ்ரீனிவாஸ், உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்திய கடற்படையின் தலைமை மற்றும் மேலாண்மை பயிற்சி நிறுவனமான கோவை ஐ.என்.எஸ்., அக்ரானிக்கு, துணை அட்மிரல் ஸ்ரீனிவாஸ்(பிளாக் ஆபிசர் கமாண்டிங் இன் சீப், தெற்கு கடற்படை கட்டளை) வருகை தந்தார். அங்கு பயிற்சி முறை, கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்ட அவர் உயர் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளிடம் கலந்துரையாடினார்.
தொடர் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்திருந்து, கடற்படையின் தேவைகளை பூர்த்தி செய்ய தயாராக இருக்கவும், அர்ப்பணிப்புடன் பணிபுரியவும் அறிவுறுத்தினார்.
துணை அட்மிரல் வருகையானது, உயர் தரமான பயிற்சி மற்றும் கடற்படையின் செயல் திறனை மேலும் பலப்படுத்தும் வகையில் இருந்தது.