ADDED : மார் 04, 2026 05:03 AM
காரமடை: காரமடையில் தேங்காய்களை தோட்டங்களுக்கே வந்து கொள்முதல் செய்ய வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மருதுார், வெள்ளியங்காடு, கன்னார்பாளையம், சிக்காரம்பாளையம், தோலம்பாளையம், தேக்கம்பட்டியில், தென்னை பிரதான விவசாயமாக உள்ளது.
கோடைகாலம் நெருங்கிய நிலையில், தேங்காய் வரத்து இனி வரும் நாட்களில் வெகுவாக குறையும். இதன் தாக்கத்தால், நாளுக்கு நாள் தேங்காயின் விலை உயர்ந்துக் கொண்டே வருகிறது.
தேங்காய்க்கு ஏற்பட்ட டிமாண்ட் காரணமாக, வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கு சென்று, தேங்காய்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.
காரமடை வட்டார விவசாயி ஒருவர் கூறுகையில், 'தேங்காய் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை என விலை பேசி, வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.
வெயில் அதிகரித்தால், தேங்காய் உற்பத்தி பாதிக்கும். தற்போது உள்ள தேங்காய்கள் காய்ந்து வருவதால், விற்பனை செய்ய காலம் தாமதமானால், வெடிப்பு ஏற்டும்' என்றார்.
