உதவித்தொகையை உயர்த்த வேண்டும் பார்வை மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
உதவித்தொகையை உயர்த்த வேண்டும் பார்வை மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
UPDATED : நவ 16, 2026 05:57 PM
ADDED : நவ 16, 2026 05:55 PM

கோவை: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த கோரி, பார்வையற்றோர் இணையம் தமிழ்நாடு மேற்கு மண்டலம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பங்கேற்றவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக மாதந்தோறும் ரூ.1,500ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. ஆனால், பிற மாநிலங்களில் ரூ.6,000 வரை வழங்கப்படுகிறது. தற்போதைய விலைவாசி உயர்வில், ரூ.1,500ஐ வைத்து அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியவில்லை.
தற்காலிக பணியில் உள்ள மாற்றுத்திறனாளி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து; அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களில், சிறப்பு தேர்வு நடத்தி, தகுதியுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் வலியுறுத்தினர்.
