தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம்

 வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம்

 வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கும் முகாம்


ADDED : பிப் 24, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 06:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்பட்டது.

வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கண் பார்வையினால் ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்பட்டது. வால்பாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் இந்த திரவம் வழங்கப்பட்டது.

வால்பாறை நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர் கவுரிசங்கர் முகாமை துவக்கி வைத்து பேசும் போது, ''குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், கண் பார்வை குறைபாடுகளை தடுக்கும் வகையிலும் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்டுகிறது. இந்த திரவம் உட்கொள்வதால் குழந்தைகளுக்கு சிறுவயதில் ஏற்படும் கண் பாதிப்புக்களை தடுக்க முடியும். வரும் 28ம் தேதி வரை குழந்தைகளுக்கு இந்த திரவம் வழங்கப்படுகிறது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us