/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலாசாரத்தை பறைசாற்றிய 'விழா வீதி' ; கோலாகலமானது கிராஸ்கட் ரோடு
/
கலாசாரத்தை பறைசாற்றிய 'விழா வீதி' ; கோலாகலமானது கிராஸ்கட் ரோடு
கலாசாரத்தை பறைசாற்றிய 'விழா வீதி' ; கோலாகலமானது கிராஸ்கட் ரோடு
கலாசாரத்தை பறைசாற்றிய 'விழா வீதி' ; கோலாகலமானது கிராஸ்கட் ரோடு
ADDED : நவ 24, 2024 11:48 PM

கோவை; கோவை விழாவின் 17வது பதிப்பு, நவ., 24 முதல் டிச., 1 வரை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
கோவையின் கலாசாரத்தை கொண்டாடும் வகையிலும், 220வது கோவை தினத்தை கொண்டாடும் விதமாகவும், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் நேற்று நடந்த, 'விழா வீதி' எனும், கலை நிகழ்ச்சிகளை ஏராளமானோர் கண்டுகளித்தனர். கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், கிராஸ்கட் ரோட்டில் நிகழ்ச்சி நடந்தது.
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்,''கோவையின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடக்கும் இந்த நிகழ்ச்சி, வரவேற்புக்குரியது. கோவையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
முதல்வர் கோவையின் வளர்ச்சியில் தனிகவனம் செலுத்தி வருகிறார். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக நுாலகம், டைடல் பார்க் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன,'' என்றார்.
நிகழ்ச்சியில், பரதநாட்டியம், பறை இசை, ஜமாப், வள்ளி கும்மி உள்ளிட்ட, 30 கலாசார இசை நிகழ்ச்சிகள் நடந்தன.
விழா வீதி நிகழ்வில், சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற, 150 கலைஞர்களின் இசை, நடனங்கள் பல்வேறு கலை, கலாசார சங்கங்களை சேர்ந்த, 300க்கும் அதிகமான கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் நடந்தன. கிராஸ் கட் ரோட்டின் துவக்கத்தில் இருந்து இறுதி வரை கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மலர்விழி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.