/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளர்களை கவுரவித்த வி.எல்.பி.,
/
தொழிலாளர்களை கவுரவித்த வி.எல்.பி.,
ADDED : மே 02, 2025 09:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவைப்புதூர், வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில், சரவணம்பட்டி புரோசோன் மாலில், சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.
கல்லாறு, சச்சிதானந்தா ஜோதி நிகேதன் சர்வதேசப் பள்ளியின் செயலாளர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில், பல்வேறு சமூக பங்களிப்பாளர்கள், துாய்மை தொழிலாளர்கள், ஒட்டுநர்கள், மலர் விற்பனையாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த, 150 தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
அவர்களின் உழைப்பையும், தன்னம்பிக்கையையும் பாராட்டி, சீர்மிகு உழைப்பாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது.கல்லூரியின் துணை முதல்வர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

