/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வி.எல்.பி. கல்லுாரியில் ஆராய்ச்சி கருத்தரங்கு
/
வி.எல்.பி. கல்லுாரியில் ஆராய்ச்சி கருத்தரங்கு
ADDED : செப் 15, 2025 11:14 PM

கோவை; கோவைப்புதுார், வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு சார்பில், 'சமூக தாக்கத்துக்கான ஆராய்ச்சி, புதுமை, காப்புரிமை மற்றும் நீட்டிப்பு' என்ற தலைப்பில், ஒரு நாள் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
கோவை பாரதியார் பல்கலை அறிவியல் கல்வி பிரிவின் டீன் பரிமேலழகன், காப்புரிமை மற்றும் அறிவுப் பகிர்வு வழிமுறைகள் கல்வி நிலப்பரப்பை எவ்வாறு மாற்றுகின்றன என்பது குறித்து விளக்கினார்.
பாரதியார் பல்கலையின் இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் இயக்குனர் பொன்பாண்டியன் ஆய்வக விளைவுகளைத் தாண்டி, கல்வி பங்களிப்புகள் சமூக தலையீடுகளாக மாற்றக்கூடிய வழிகளை, ஆராய்ச்சியாளர்கள் ஆராய வேண்டும் என ஊக்குவித்தார்.
கல்லுாரி முதல்வர் கலைவாணி, கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் பிருந்தா, ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுலேகா மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.