/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் குரல் இசைப்போட்டி
/
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் குரல் இசைப்போட்டி
ADDED : டிச 04, 2024 10:22 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், கானாம்ருதம் 2024 என்ற தலைப்பில் நடந்த தனிநபர் குரல் இசை போட்டியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், சுவாமி விவேகானந்தா பண்பாடு மற்றும் பாரம்பரிய மைய இயக்குனர் அழகேசன் வரவேற்றார். கலா நிலைய நடுநிலைப் பள்ளியின் செயலாளர் சுவாமி ஹரிவ்ரதானந்தர் அறிமுக உரையாற்றினார். இளையோர், மூத்தோர் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.
வெற்றி பெற்றவர்களுக்கு ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்து பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.

