தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தென்னை மரம் ஏறுவதற்கு தொழில் வாய்ப்பு பயிற்சி

தென்னை மரம் ஏறுவதற்கு தொழில் வாய்ப்பு பயிற்சி

தென்னை மரம் ஏறுவதற்கு தொழில் வாய்ப்பு பயிற்சி


ADDED : செப் 03, 2026 03:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 03:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்வி நிறுவனம் சார்பில், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களை உருவாக்கி, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில், கொக்கோ மித்ரா பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியை, வாணவராயர் கல்வி நிறுவன திட்ட தலைவர் மற்றும் துணை முதல்வர் காளிதாஸ் வரவேற்றார். கோவை தென்னை வளர்ச்சி வாரியத்தின் துணை இயக்குனர் ஜெயஸ்ரீ பங்கேற்றார். கள அலுவலர் அனீஷ் முரளிதரன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியம், பெரும்பதி தென்னை மரம் ஏறுவோர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

முதன்மை பயிற்சியாளர் வாயிலாக, 6 பயிற்சி அமர்வுகள் நடத்தப்பட்டன. தென்னை சாகுபடி முறைகள் குறித்து பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி விளக்கினார். மண் மேலாண்மை மற்றும் மண், நீர் பரிசோதனை குறித்து பேராசிரியர் இலக்கியா பேசினார். தென்னை மற்றும் வாழையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை சார்ந்த தகவல்களை பேராசிரியர் துர்காதேவி பேசினார்.

பயிற்சியின் வாயிலாக, மரம் ஏறும் திறன் மற்றும் தென்னை சார்ந்த வேளாண் தொழில்நுட்பம் குறித்து தெரிவிக்கப்பட்டது. நிறைவு விழாவில், பசுமை தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் திருவேங்கடம் வரவேற்றார். வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவன முதல்வர் பிரபாகர் தலைமை வகித்து பேசினார். தென்னை வளர்ச்சி வாரியத்தின் இயக்குனர் அரவாழி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us