/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வாழ்க்கை பிரகாசமாக தொழிற்பயிற்சி அவசியம்!'
/
'வாழ்க்கை பிரகாசமாக தொழிற்பயிற்சி அவசியம்!'
ADDED : ஏப் 10, 2025 10:25 PM
வால்பாறை; மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக அமைய வேண்டுமானால், தொழிற்பயிற்சி படிக்க வேண்டும், என, முதல்வர் தெரிவித்தார்.
வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் முதல்வராக பணியாற்றிய குணசேகரன், கோபிசெட்டிபாளையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, கோவை தொழில் பயிற்சி மையத்தில் பணிபுரிந்து வந்த பழனிசாமி, வால்பாறை ஐ.டி.ஐ., முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
அவர் பேசுகையில், ''மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக அமைய, தொழிற்பயிற்சி மிக அவசியமாகும். மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், தமிழக அரசு செய்துள்ளது. நல்ல முறையில் படித்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். வரும் கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

