/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில் பயிற்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
தொழில் பயிற்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 22, 2026 05:29 AM
வால்பாறை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வால்பாறை தொழில் பயிற்சி நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்கத்தின் சார்பில், வால்பாறை நகரில் உள்ள அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தின் முன் மதிய உணவு இடைவெளையின் போது, ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணை தலைவர் நடராஜ் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், சான்றிதழ்தாரர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும். தொழில்நுட்ப காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஜே.டி.ஓ.,பணி நியமனத்தில் 1:1 என்பதை அமல்படுத்த வேண்டும். தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் பயிற்சியாளர்களுக்கு காலமுறையற்ற ஊதியம் வழங்க வேண்டும்.
2005ம் ஆண்டு பணியில் சேர்ந்த பணிமனை பண்டக உதவியாளர்களின் பணிக்காலத்தை, வரன்முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

