/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபால் போட்டி: சி.எம்.எஸ்.,முதலிடம்
/
வாலிபால் போட்டி: சி.எம்.எஸ்.,முதலிடம்
ADDED : ஜூலை 23, 2025 09:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மாவட்ட அளவிலான பர்ஷித் நினைவு கோப்பைக்கான வாலிபால் போட்டியில் சி.எம்.எஸ்., அணி, முதல் பரிசை தட்டியது.
மாவட்ட அளவிலான பர்ஷித் நினைவு கோப்பைக்கான வாலிபால் போட்டி, சின்னவேடம்பட்டியில் உள்ள டி.கே.எஸ்., பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 30 அணிகள் பங்கேற்றன.
போட்டியில், சி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து, கோப்பையை வென்றனர். வெற்றி பெற்ற அணியினரை பள்ளி தலைவர் ராமச்சந்திரன், முதல்வர் ஸ்ரீப்ரியா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.