/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: வால்பாறையில் 62 சதவீதம் நிறைவு
/
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: வால்பாறையில் 62 சதவீதம் நிறைவு
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: வால்பாறையில் 62 சதவீதம் நிறைவு
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: வால்பாறையில் 62 சதவீதம் நிறைவு
ADDED : நவ 28, 2025 04:54 AM

வால்பாறை: வால்பாறையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி, 62 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
வால்பாறை சட்டசபை தொகுதியில், ஓட்டுச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த, 4ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடக்கிறது.
ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு படிவம் வினியோகித்தனர். தற்போது பொதுமக்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை திரும்ப பெறும் பணியும் நடக்கிறது.
இந்நிலையில், பொதுமக்களிடம் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை தாசில்தார் அலுவலகத்தில் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் ஆய்வு செய்யும் பணியும், அதன்பின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியும் நடக்கிறது.
தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும் பணி தொடர்ந்து நடக்கிறது. மலைப்பகுதியில் மொத்தம், 51,192 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் வீடு தோறும் சென்று, விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது. இது வரை, 62 சதவீதம் வாக்காளர்களின் படிவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்களும் உடனடியாக ஆய்வு செய்த பின் பதிவேற்றம் செய்யப்படும்,' என்றனர்.

