/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விரைவில் படகுசவாரி துவங்கும்: நகராட்சி கமிஷனர் தகவல்
/
விரைவில் படகுசவாரி துவங்கும்: நகராட்சி கமிஷனர் தகவல்
விரைவில் படகுசவாரி துவங்கும்: நகராட்சி கமிஷனர் தகவல்
விரைவில் படகுசவாரி துவங்கும்: நகராட்சி கமிஷனர் தகவல்
ADDED : நவ 28, 2025 04:53 AM

வால்பாறை: சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், மீண்டும் படகுசவாரி துவங்கும் என, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வந்து செல்ல நவம்பர் மாதம் முதல் இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வால்பாறை வரும் சுற்றுலா பயணியரின் பொழுதுபோக்கு வசதிக்காக நகராட்சி சார்பில், படகு இல்லம், தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
படகு இல்லத்தில் கழிவு நீர் தேங்கியதால் கடந்த சில மாதங்களாக படகுசவாரி செயல்படவில்லை. தற்போது, படகு இல்லம் துார்வாரப்பட்டு, மீண்டும் சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்காக திறக்க நகராட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நகராட்சி கமிஷனர் குமரன் கூறியதாவது:
படகு இல்லத்தில் பல மாதங்களாக தேக்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, இடிந்த நடைபாதை சீரமைக்கப்படுகிறது.
வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் பணிகள் நிறைவடைந்ததும், சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்காக படகுசவாரி மீண்டும் செயல்படுத்தப்படும். இதே போல் பூங்காவில் உள்ள புதர் செடிகள் அகற்றப்பட்டு, புதியதாக பூச்செடிகள் நடவு செய்யப்படும்.
இவ்வாறு, கூறினார்.

