/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருப்பு பட்டை அணிந்து விவசாயிகள் போராட்டம்
/
கருப்பு பட்டை அணிந்து விவசாயிகள் போராட்டம்
ADDED : நவ 28, 2025 04:53 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், கருப்பு பட்டை அணிந்து தர்ணா போராட்டம் நடந்தது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், புதுடில்லியில் போராட்டம் நடத்தியதன் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, ஐக்கிய விவசாயிகள் முன்ணணி சார்பில் கருப்பு பட்டை அணிந்து தர்ணா போராட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடந்தது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ஸ்டாலின் பழனிசாமி வரவேற்றார். மாவட்ட செயலாளர் பழனிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் மதுசூதனன் பேசினர்.
விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வதை சட்டமாக்க வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதா, 21 ஐ கைவிட வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைசாமி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள் பெரியசாமி, மணிகண்டன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

