/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் உள்ள 10 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம்

ADDED : ஜூன் 02, 2025 11:39 PM
கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளுக்கும், வாக்காளர் பதிவு அலுவலர்களை, தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தமிழகத்தில், 2026ல் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அத்தேர்தலில் பயன்படுத்துவதற்கான வாக்காளர் பட்டியல், 2026 ஜனவரியில் வெளியிடப்படும். இம்முறை துல்லியமான பட்டியல் தயாரிக்க ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. இறந்த வாக்காளர்களின் பெயர்கள், முகவரி மாறிச் சென்றவர்கள், இரட்டை பதிவு போன்றவற்றை நீக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. வாக்காளர்களின் ஆதார் எண்களை பட்டியலுடன் இணைத்தால், நுாறு சதவீதம் தவறில்லாமல் தயாரிக்க முடியும் என்பதால், அதற்கான பணிகளும்நடந்து வருகின்றன.
தற்போது சட்டசபை தொகுதி வாரியாக, வாக்காளர் பதிவு அலுவலரை, தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். புதிதாக தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியலுக்கு இந்த அதிகாரிகளே பொறுப்பாவார்கள்.