ADDED : மார் 25, 2026 10:39 PM

அ நிறம் | அளவு
ரேஸ்கோர்ஸ்: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் வாக்காளர்களின் அத்யாவசிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகரின் முக்கிய இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
மாநில விவசாயிகள் சங்கம், ஊழல் எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட ஐந்து அமைப்புகள் இணைந்து இந்த பேனர்களை நிறுவியுள்ளன.
இதுகுறித்து மாநில விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கூறுகையில், ''அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ள வெளிப்படைத்தன்மை அவசியம். ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் பற்றிய விவரங்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
இதேபோன்ற பேனர்கள் கிராமப்புறங்களிலும் அமைக்க திட்டமிட்டுள்ளோம். ஓட்டு கேட்க வரும் வேட்பாளர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்,'' என்றார்.
