/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் தின வினாடி - வினா; வென்றவர்களுக்கு பாராட்டு
/
வாக்காளர் தின வினாடி - வினா; வென்றவர்களுக்கு பாராட்டு
வாக்காளர் தின வினாடி - வினா; வென்றவர்களுக்கு பாராட்டு
வாக்காளர் தின வினாடி - வினா; வென்றவர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 18, 2024 10:27 PM
- நமது நிருபர் --
தமிழகத்தில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தேசிய வாக்காளர் தின வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, சென்னை தலைமை தேர்தல் அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக, மண்டல அளவிலான வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட அளவிலான வினாடி - வினா போட்டியில் அம்மாபாளையம் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயா மெட்ரிக் பள்ளியை சேர்ந்த பிரீத்தி, ஹர்ஷன் முதலிடம்; கொங்கு மெட்ரிக் அக் ஷயா - கிருத்திக் இரண்டாமிடம் பிடித்தனர்.
இதில் பிரீத்தி - ஹர்ஷன் அணி, முதல் சுற்று மற்றும் அரையிறுதியில் வெற்றிபெற்று, மாநில அளவிலான வினாடி - வினா இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
தேசிய வாக்காளர் தினமான வரும் ஜன., 25ம் தேதி நடைபெறும், மாநில அளவிலான வினாடி - வினா போட்டியில், திருப்பூர் மாவட்டம் சார்பில் இம்மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
மாநில அளவிலான வினாடி வினாவுக்கு தகுதிபெற்ற மாணவர்கள் இருவரையும், கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் பாராட்டினர்.