ADDED : ஏப் 23, 2026 06:09 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தொட்டபாவியில் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் ஜடையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தொட்டபாவி கிராமத்தில், 162 வது வாக்குச்சாவடியில் மின்னணு இயந்திரம் கோளாறு ஆனது. இதனால் நேற்று காலை 7 மணிக்கு துவங்க வேண்டிய வாக்குப்பதிவு துவங்காமல், காலதாமதம் ஆனது. காலை 6.30 மணி முதல் காத்திருந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பின் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் மின்னணு இயந்திரம் சரிபார்க்கப்பட்டு காலை 8.40 மணிக்கு மேல் வாக்குப்பதிவு துவங்கியது.
