/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்களிப்பது கடமை; விழிப்புணர்வு பேரணி
/
வாக்களிப்பது கடமை; விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 28, 2025 11:29 PM

சூலுார்; தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து, சூலுாரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி, சூலுார் தாலுகா தேர்தல் பிரிவு சார்பில், விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கதிர் கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் வருவாய்த் துறையினர் தேர்தல் பிரிவினர் வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்றனர்.
தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணியை, தாசில்தார் தனசேகர் துவக்கி வைத்தார். தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் தினமகாராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சந்தைப்பேட்டை ரோடு, திருச்சி ரோடு, ரயில்வே பீடர் ரோடு வழியாக சென்ற பேரணி மீண்டும் தாலுகா அலுவலகத்தை அடைந்தது.
18 வயது பூர்த்தியான அனைவரும் வாக்காளர்களாக வேண்டும். வாக்களிப்பது நமது உரிமை; நமது கடமை. அனைவரும் வாக்களிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் பேரணியில் ஏந்தி சென்றனர்.
விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

