/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல் விளக்கம் துவக்கம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல் விளக்கம் துவக்கம்
ADDED : ஜன 23, 2026 05:54 AM
- நமது நிருபர் -:
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி, எவ்வாறு ஓட்டளிப்பது என்று வாக்காளருக்கு விளக்கும் வகையில், ஓட்டுப்பதிவு செயல்விளக்க முகாம்கள், மாவட்டத்தில் ஐந்து இடங்களில் திறக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் கலெக்டர் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் என, மொத்தம் ஐந்து இடத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர செயல்விளக்க முகாம் நேற்று துவங்கியுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் மனிஷ் நாரணவரே, செயல்விளக்க முகாமை திறந்து வைத்து, எவ்வாறு ஓட்டுப்பதிவு செய்வது என்றும், தாங்கள் பதிவு செய்த ஓட்டு சரியான நபருக்கு, சரியான சின்னத்தில் பதிவானதை, 'விவிபேட்'டில் எவ்வாறு சரிபார்ப்பது என்றும், வாக்காளருக்கு விளக்கினார். தேர்தல் பிரிவு தனி தாசில்தார் கனகராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், 'வாக்காளர்களுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், எவ்வாறு வாக்களிப்பது என்று விளக்கும் வகையில், சிறப்பு முகாம் துவங்கியுள்ளது.
அலுவலக நேரத்தில், இம்மையங்கள் செயல்படும்; உதவியாளர் எப்போதும் இருப்பார்கள். வாக்காளர், எவ்வாறு ஓட்டுப்பதிவு செய்வது என்று, மாதிரி ஓட்டுப்பதிவு செய்து சரிபார்க்கலாம். இத்துடன், வரும், 25ம் தேதி முதல், சட்டசபை தொகுதிகள் வாரியாக, நடமாடும் மாதிரி ஓட்டுப்பதிவு முகாம் வாகனம் இயங்க துவங்கும்.
அம்மையம், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முதியோர்களுக்கு, ஓட்டுப்பதிவு செய்வது குறித்து, தொடர்ச்சியாக செயல்விளக்கம் அளிக்கும் பணியை மேற்கொள்ளும்,' என்றனர்.

