தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்விளக்கம் துவக்கம்

 ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்விளக்கம் துவக்கம்

 ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்விளக்கம் துவக்கம்


ADDED : பிப் 26, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 06:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை சட்டசபை தொகுதியில் மொத்தம், 1,72,284 வாக்காளர்கள் உள்ளனர். இதில், வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலையில், 1,32,207 வாக்காளர்கள் உள்ளனர். வால்பாறை மலைப்பகுதியில் 40,077 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி எவ்வாறு ஓட்டளிப்பது என்று வாக்காளர்களுக்கு விளக்கும் வகையில், மாதிரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு, அதில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரமும், 'விவிபேட்' இயந்திரமும் வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் அந்த இயந்திரங்களில் மாதிரி ஓட்டுப்பதிவு செய்து, தங்கள் பதிவிட்ட ஓட்டு 'விவிபேட்' இயந்திரத்தில் தெரிவதை உறுதி படுத்திக்கொண்டனர். இதற்காக அமைக்கப்பட்ட தனி வாகனங்களை கொண்டு, வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதி வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை தாசில்தார் அருள்முருகன் தலைமையில், தேர்தல் துணை வட்டாட்சியர் முருகன் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us