/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளியில் பயன்பாட்டுக்கு வந்தது வி.ஆர்., ஆய்வகம்
/
மாநகராட்சி பள்ளியில் பயன்பாட்டுக்கு வந்தது வி.ஆர்., ஆய்வகம்
மாநகராட்சி பள்ளியில் பயன்பாட்டுக்கு வந்தது வி.ஆர்., ஆய்வகம்
மாநகராட்சி பள்ளியில் பயன்பாட்டுக்கு வந்தது வி.ஆர்., ஆய்வகம்
ADDED : ஏப் 10, 2025 11:24 PM
கோவை; கோவை மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட வி.ஆர்., என்கிற தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அறிவியல் ஆய்வகத்தை, அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று திறந்து வைத்தார்
ஏ.ஐ., தொழில்நுட்பம் அடிப்படையில், 'விர்ச்சுவல் ரியாலிட்டி'யை தத்ரூபமாகக் கொண்டு வரும் வகையில், கோவை மாநகராட்சியில் ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் மாநகராட்சி பள்ளியில் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று திறந்து வைத்தார். பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், கல்விக்குழு தலைவர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'சர்வதேச தரத்துக்கு 'விர்ச்சுவல் ரியாலிட்டி' என்கிற தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதயம் எப்படி செயல்படுகிறது; நரம்பு மண்டலம் எப்படி; நுரையீரல் எவ்வாறு இயங்குகிறது என்பதை மிகத்துல்லியமாக தெரிகிறது. மாணவியரின் கல்வி கற்கும் திறன் மேம்படுகிறது; மதிப்பெண் உயரும்' என்றனர்.
பள்ளி மாணவியர் கூறுகையில், 'பாடப்புத்தகத்தில் படிப்பதற்கும், தொழில்நுட்ப ஆய்வகத்தில் படிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நுணுக்கமான பகுதிகளை படிப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. வி.ஆர்., ஆய்வகத்தில் பார்க்கும்போது எளிமையாக இருந்தது. இடையூறு இல்லாமல் பாடத்தில் முழு கவனம் செலுத்த முடிகிறது' என்றனர்.