/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கபடி போட்டியில் வி.ஆர்.டி. பள்ளி வெற்றி
/
கபடி போட்டியில் வி.ஆர்.டி. பள்ளி வெற்றி
ADDED : செப் 05, 2025 09:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை,;பள்ளிகளுக்கு இடையேயான முதல்வர் கோப்பை கபடி போட்டியில், ஆனைமலை வி.ஆர்.டி. பள்ளி மாணவியர் வெற்றி பெற்றனர்.
கோவை கற்பகம் பல்கலை கல்லுாரியில், கோவை மாவட்ட முதல்வர் கோப்பை பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டி நடைபெற்றது.அதில், ஆனைமலை வி.ஆர்.டி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் முதல் பரிசை பெற்றனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவியர், கோவை மாவட்ட கபடி அணியில் இடம் பெற்று, மாநில அளவிலான முதல்வர் கோப்பை போட்டியில் விளையாட உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவியரை, பள்ளி தலைமையாசிரியர் ரம்யா, ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்குமார், முருகன், ஹரிணிபிரியா ஆகியோர் பாராட்டினர்.