ADDED : ஏப் 18, 2026 04:23 PM
கோவை: அவிநாசி ரோட்டில் உள்ள லீமெரிடியன் ஹோட்டலில் கோயம்புத்தூர் பில்டர்ஸ் அண்ட் கான்ட்ராக்டர் சங்கத்தின், 2026--- 27ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடந்தது.
தலைமை விருந்தினராக பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியம் பங்கேற்றார். கவுரவ விருந்தினராக அருண் அசோசியேட்ஸ் நிறுவனர் அருண் பிரசாத், 'கிரடாய்' அமைப்பின் தலைவர் அரவிந்த் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், தலைவராக ரவிச்சந்திரன், தேர்வு தலைவராக சம்சுதீன், கவுரவ பொருளாளராக கிருஷ்ணகுமார், கவுரவ செயலாளராக உதயானந்த், கவுரவ இணைச் செயலாளராக சின்னையா ஆகியோர் பொறுப்பேற்றனர்.
சிபாகா முன்னாள் தலைவர் ரம்யா செந்தில் வரவேற்றார். ஜனாதிபதியின் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்ற ஆசிரியர் செல்வநாயகம், இந்திய ரியல்டர்ஸ் தேசிய அமைப்பின் முன்னாள் தலைவர் சிவக்குமார் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
