ADDED : மே 28, 2026 05:44 AM

கோவை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரங்களில் உள்ள பேப்பர் ரோல்கள், கலெக்டர் பவன்குமார் முன்னிலையில் எடுக்கப்பட்டது.
சட்டசபை தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் விவிபேட் இயந்திரங்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தலைமை தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதலின்படி, விவிபேட் இயந்திரங்களில் உள்ள பேப்பர் ரோல்கள், நேற்று கலெக்டர் பவன்குமார் முன்னிலையில் அகற்றப்பட்டன. தொடர்ந்து, ரோட்டரி கிளப் சார்பில் நடந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாகன பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
இப்பேரணி, 'ஒவ்வொரு மரக்கன்றும் பசுமையான நாளை நோக்கிய ஒரு முன்னேற்றமான படி' என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
